Saturday 31 December 2011

தென்னூர் தொடக்க பள்ளிக்கு பிடி கொடுத்து ஆறாம் வகுப்பிற்கு st Joseph high school செல்ல தேர்வு எழுதி இடமும் வாங்கி அப்பா உடன் முதல் நாள் சென்று உட்கார்தால் மனதில் இனம் புரியாத பயம்... 7 பிரிவுகள் கொண்ட ஆறாம் வகுப்ப்பு நான்கு மாடிகள் கொண்ட பெரிய கட்டிடம். வெள்ளை அங்கி
அணிந்த பாதிரியார் பிரின்சிபால்.. இவர்களுடன் அறுநூறுக்கும் மேலான மாணவர்கள்.. மனதில் இவர்களை எப்படி சமாளிப்போம் ?

நொண்டிகுதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு என்பது போல ஆங்கில மீடியம் கொடுக்க வில்லை எனவே அப்பள்ளிக்கு செல்லமாட்டேன்.. இப்படி அப்பாவிடம் சொல்ல  .....
அவர் தனது மூத்த குரு பெரியவர் கோனாரிடம் ஓடினார். நெற்றியில் நீண்ட நாமத்துடன் முகத்தில் மாற புன்னகையும் நல்ல பருத்தி ஜிப்பா... இப்படிதான் அவரின் நினைவுகள்..  எனது முகத்தை பார்த்த மாத்திரத்தில் என் உள்ளுணர்வை அறிந்து அப்பாவிடம் பக்குவமாய் எடுத்து என்னை வேறு பள்ளியில் சேர்க்க கூறினார்.. ஆஸ்தான பள்ளியான ஹீபர் புத்தூரில் சேர்த்தது..
இதன் மூலம் அறிந்த பாடம். ஆனாலும், இக்காலத்தில் இயல்பாய் செயல்  படுத்தாத ஒரு அப்பாவாய் சில நேரங்களில் இருந்தது ...அடுத்த எண்ணங்கள் பகிர்வு புத்தாண்டில்... இந்த எண்ணங்களை படிப்போர் தங்கள் அபிப்ராயனகளை பகிருங்கள்.
 

No comments:

Post a Comment