Thursday, 15 December 2011

குருநிலை பள்ளியின் சிறு நினைவு அலைகள்

ராமகிருஷ்ணன் அவர் தான் ஹெட் மாஸ்டர் ..  ஆத்து தமிழ் பேச்சில் "ஆஜானு பாஹு " தலையில் முடிந்த குடுமியும், நெற்றியில் பளிச்சிடும் விபூதியும் அதன் நடுவில் வீற்று இருக்கும் சிறிய சந்தன பொட்டும் அவருடைய trade   மார்க்.

தினமும் நாலு மைல் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவார்.

பரர்த்தனை பாடலாய் அன்னவாகன தேவியையும் யகுந்தேந்து துஷார ஸ்லோகமும் கணீரென்று வரும். அதன் பொருள் விளங்காத பருவம். ஆனாலும் கூடவே பாடுவோம்.

அதன் பின்னர்... மன கணக்கு பலருக்கு ஆமணக்கு சிலருக்கு சுணுக்கு ஆனால் ரா மகிரிஷ்ணருக்கோ முழுதும்  இனக்கு.
அவரின் ஒரே அவா தென்னூர் குருநிலை பள்ளியின் பசங்கள் St Joseph அல்லது Bishop Heber உயர் நிலை பள்ளியில் சேரவேண்டும். அரவணைக்கும் all st school or fatma school துணை இல்லாமலே இந்த பள்ளியின் பசங்கள் நற் கல்வி கற்க வேண்டும் என்ற குறிக்கோள். அதே போல பெண்கள் holy cross or svs இல் சேர வேண்டும்.. இவரின் இந்த எண்ணங்கள் வாழ்கையில் தன் வலிமையில் உயர வேண்டும், முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது..

இன்றும் நினைவில் நிற்கும் ஆசிரியர்/யைகள்-  சீதா லக்ஷ்மி , தங்கம் (பழம் பெருச்சாளி  inippay விரும்பும்) ,mangalm, லில்லி,... லில்லி அவர்களுக்கு எனக்கு இங்கிலீஷ் முதல் பாடம் ஊக்கத்துடன் சொல்லி கொடுத்தமைக்கு நன்றி...
















No comments:

Post a Comment