Thursday 8 December 2011

Muthal blog mdiyavillai

நாட்டு ஓட்டு வீட்டின் திண்ணையில் உக்காந்து  வேப்பமரத்தின் குளிர்ந்த  காற்றை வார்  வைத்த அரை நிஜாருடன் திறந்த மார்பில் வாங்கிகொண்டு, குறுக்கும் நெடுக்குமாய் ஓடும்
 அணில்களின் கீச்சுகளுடன் கலந்து  " சிறு விரல்கள் தடவி பரிமாறும் திருமாலையும் சூழ்ச்சி ஞான சுடரொளியாய் திகழ் தென்னாடுடைய சிவனையும், கிருஷ்ணா பிள்ளையின் இரட்சணிய  யாத்ரிகத்தையும், உமறுப்புலவரி
சீராப்புரானத்தையும் தமிழ் தேர்வுக்காக
மட்டுமன்றி அதன் இனிமையிகக்காகவும் மனனம் செய்த இளமை கால எண்ணங்கள்
இந்த எண்ணக்குதிரைகளின் முதல் வெளிப்பாடு.
குளிர்ந்த தண்ணீருக்காக குழாயை திறக்காமல் "ராட்டினம் ரீங்காரம்" செய்யும் கிணற்றில் இருந்து வாளி வாளியாக தண்ணீர் கொட்டி குளித்தது

தந்தை தமிழ் வாத்தியாரின்.... எந்த பாடம் எடுத்தாலும் மாணவ செல்வங்களை அவர்கள் வழியில்  சென்று
 பாடம் சொல்லிக்கொடுத்ததை திண்ணையின் மூலையில் இருந்து கண்கூடாக கண்ட நினைவலைகள்... 

கிரிக்கெட் ஆடியே தீரவேண்டும்... ஆனால் Slazengar battum  Kokkaburra பந்தும்  இல்லை.. தேவயட்டற சைக்கிள் ட்டுபே  
கத்தரித்து பழைய துணியில் கோர்த்து கிடைத்த மரத்தின் பகுதியை மட்டை ஆக்கி தெரு மண்ணில் உருண்டு புரண்டு உலகின் எல்லா டீம்களாகி விளையாடியது..

காவேரிக்கரையும், தெப்பக்குளமும், அதன் அருகில் விற்கும் 5 பைசா வடையும்  மைகேல் ௨௦ பைசாவுக்கு தின்ற ஐஸ் கிரீம்   நெஞ்சைவ்ட்டு அகலாத நினைவுகள்

No comments:

Post a Comment