Saturday, 31 December 2011

தென்னூர் தொடக்க பள்ளிக்கு பிடி கொடுத்து ஆறாம் வகுப்பிற்கு st Joseph high school செல்ல தேர்வு எழுதி இடமும் வாங்கி அப்பா உடன் முதல் நாள் சென்று உட்கார்தால் மனதில் இனம் புரியாத பயம்... 7 பிரிவுகள் கொண்ட ஆறாம் வகுப்ப்பு நான்கு மாடிகள் கொண்ட பெரிய கட்டிடம். வெள்ளை அங்கி
அணிந்த பாதிரியார் பிரின்சிபால்.. இவர்களுடன் அறுநூறுக்கும் மேலான மாணவர்கள்.. மனதில் இவர்களை எப்படி சமாளிப்போம் ?

நொண்டிகுதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு என்பது போல ஆங்கில மீடியம் கொடுக்க வில்லை எனவே அப்பள்ளிக்கு செல்லமாட்டேன்.. இப்படி அப்பாவிடம் சொல்ல  .....
அவர் தனது மூத்த குரு பெரியவர் கோனாரிடம் ஓடினார். நெற்றியில் நீண்ட நாமத்துடன் முகத்தில் மாற புன்னகையும் நல்ல பருத்தி ஜிப்பா... இப்படிதான் அவரின் நினைவுகள்..  எனது முகத்தை பார்த்த மாத்திரத்தில் என் உள்ளுணர்வை அறிந்து அப்பாவிடம் பக்குவமாய் எடுத்து என்னை வேறு பள்ளியில் சேர்க்க கூறினார்.. ஆஸ்தான பள்ளியான ஹீபர் புத்தூரில் சேர்த்தது..
இதன் மூலம் அறிந்த பாடம். ஆனாலும், இக்காலத்தில் இயல்பாய் செயல்  படுத்தாத ஒரு அப்பாவாய் சில நேரங்களில் இருந்தது ...அடுத்த எண்ணங்கள் பகிர்வு புத்தாண்டில்... இந்த எண்ணங்களை படிப்போர் தங்கள் அபிப்ராயனகளை பகிருங்கள்.
 

Thursday, 15 December 2011

குருநிலை பள்ளியின் சிறு நினைவு அலைகள்

ராமகிருஷ்ணன் அவர் தான் ஹெட் மாஸ்டர் ..  ஆத்து தமிழ் பேச்சில் "ஆஜானு பாஹு " தலையில் முடிந்த குடுமியும், நெற்றியில் பளிச்சிடும் விபூதியும் அதன் நடுவில் வீற்று இருக்கும் சிறிய சந்தன பொட்டும் அவருடைய trade   மார்க்.

தினமும் நாலு மைல் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவார்.

பரர்த்தனை பாடலாய் அன்னவாகன தேவியையும் யகுந்தேந்து துஷார ஸ்லோகமும் கணீரென்று வரும். அதன் பொருள் விளங்காத பருவம். ஆனாலும் கூடவே பாடுவோம்.

அதன் பின்னர்... மன கணக்கு பலருக்கு ஆமணக்கு சிலருக்கு சுணுக்கு ஆனால் ரா மகிரிஷ்ணருக்கோ முழுதும்  இனக்கு.
அவரின் ஒரே அவா தென்னூர் குருநிலை பள்ளியின் பசங்கள் St Joseph அல்லது Bishop Heber உயர் நிலை பள்ளியில் சேரவேண்டும். அரவணைக்கும் all st school or fatma school துணை இல்லாமலே இந்த பள்ளியின் பசங்கள் நற் கல்வி கற்க வேண்டும் என்ற குறிக்கோள். அதே போல பெண்கள் holy cross or svs இல் சேர வேண்டும்.. இவரின் இந்த எண்ணங்கள் வாழ்கையில் தன் வலிமையில் உயர வேண்டும், முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது..

இன்றும் நினைவில் நிற்கும் ஆசிரியர்/யைகள்-  சீதா லக்ஷ்மி , தங்கம் (பழம் பெருச்சாளி  inippay விரும்பும்) ,mangalm, லில்லி,... லில்லி அவர்களுக்கு எனக்கு இங்கிலீஷ் முதல் பாடம் ஊக்கத்துடன் சொல்லி கொடுத்தமைக்கு நன்றி...
















Tuesday, 13 December 2011

 தென்னூர் குருநிலை பள்ளி முதல் வகுப்பில் அடம் பிடித்து எப்படியெல்லாம் போகாமல் இருக்க முடியுமோ அத்தனியும் பண்ணி.. ஆனாலும் அப்பாவின் வலுவான கைகளின் அன்பான தர தர
இழுத்தல்---- நாற்பது மாணவர்களுடன் சேர்ந்து அறம் செய்ய விரும்பு என்று அடி வையற்றிலுருண்டு ஒலித்து.. ஒன்று முதல் பத்து வரை எண்ணி வீட்டு மணி அடித்தவுடன் சின்ன மண் திட்டில் மரத்தில் இருந்து விழுந்த பன்னீர் காயை கால் பந்தாடி வீட்டுக்கு சென்றது..

ஒழுங்காய் படிக்க வேண்டுமே என்று அம்மா அந்த நாளிலேயே எவர் சில்வர் டம்ளர் லஞ்சம் கொடுத்தது.



Thursday, 8 December 2011

Muthal blog mdiyavillai

நாட்டு ஓட்டு வீட்டின் திண்ணையில் உக்காந்து  வேப்பமரத்தின் குளிர்ந்த  காற்றை வார்  வைத்த அரை நிஜாருடன் திறந்த மார்பில் வாங்கிகொண்டு, குறுக்கும் நெடுக்குமாய் ஓடும்
 அணில்களின் கீச்சுகளுடன் கலந்து  " சிறு விரல்கள் தடவி பரிமாறும் திருமாலையும் சூழ்ச்சி ஞான சுடரொளியாய் திகழ் தென்னாடுடைய சிவனையும், கிருஷ்ணா பிள்ளையின் இரட்சணிய  யாத்ரிகத்தையும், உமறுப்புலவரி
சீராப்புரானத்தையும் தமிழ் தேர்வுக்காக
மட்டுமன்றி அதன் இனிமையிகக்காகவும் மனனம் செய்த இளமை கால எண்ணங்கள்
இந்த எண்ணக்குதிரைகளின் முதல் வெளிப்பாடு.
குளிர்ந்த தண்ணீருக்காக குழாயை திறக்காமல் "ராட்டினம் ரீங்காரம்" செய்யும் கிணற்றில் இருந்து வாளி வாளியாக தண்ணீர் கொட்டி குளித்தது

தந்தை தமிழ் வாத்தியாரின்.... எந்த பாடம் எடுத்தாலும் மாணவ செல்வங்களை அவர்கள் வழியில்  சென்று
 பாடம் சொல்லிக்கொடுத்ததை திண்ணையின் மூலையில் இருந்து கண்கூடாக கண்ட நினைவலைகள்... 

கிரிக்கெட் ஆடியே தீரவேண்டும்... ஆனால் Slazengar battum  Kokkaburra பந்தும்  இல்லை.. தேவயட்டற சைக்கிள் ட்டுபே  
கத்தரித்து பழைய துணியில் கோர்த்து கிடைத்த மரத்தின் பகுதியை மட்டை ஆக்கி தெரு மண்ணில் உருண்டு புரண்டு உலகின் எல்லா டீம்களாகி விளையாடியது..

காவேரிக்கரையும், தெப்பக்குளமும், அதன் அருகில் விற்கும் 5 பைசா வடையும்  மைகேல் ௨௦ பைசாவுக்கு தின்ற ஐஸ் கிரீம்   நெஞ்சைவ்ட்டு அகலாத நினைவுகள்