Tuesday 13 January 2015

பொங்கல் திருநாள்






http://www.chennai.org.uk/pics/pongal-chennai.jpg

  

கன்னல்,  செந்நெல் கண்டு முதல் கொண்ட
களிப்பில் கழனி, காளை, கதிரவன், யாவையும்
"" தரணியில் திக்கெட்டும் தித்திப்போங் கிடவே "
வேண்டி வணங்கும்  நன்னாள்  பொங்கல் திருநாள்
பகலவன் ஒளியில் இன்னல் நீங்கி வளம் ஓங்கி
வாழ்கென  வாழ்த்துதும் யாமே! வாழ்த்துதும் யாமே!

அன்பின்

வெற்றி இளவல் (ஜெயக்குமார் )
காலை கதிரோள் (உஷா )
அறிவுடையோன் (விவேக்)
பணிவுடையோன் (விநீத்)

Thursday 14 February 2013

கணணியும் கடவுளும் சமம்

எங்கும் இருப்போர் எல்லாம் அறிந்தோர் 

மேகத்துள் அடக்கம் தகவல் தொகுப்புகள்

தட்டின்  திறப்போர் கேட்டின்  கொடுப்போர்

கணணியும் கடவுளும் சமம் கவி குமரனுரை 
 

Friday 30 November 2012

அப்புட்டுவின் அகால மரணம்

நேற்று மாலை இல்லம் சென்று அடைந்த பின்னர் அறிந்த அதிர்ச்சி செய்தி
நாற்பதின் அருகில் இருந்த அப்புட்டுவின் அகால மறைவு. ஒரு புறம் பெற்ற அன்னை தந்தை மறுபுறம் மனைவி . இரு இளம் பெண் குழந்தைகள் . இவர்களின் எண்ணங்களை, கனவுகளை ஏக்கங்களாய் மாற்றி எழுதி இறந்து விட்டார்.
வெகு பல ஆண்டுகட்கு முன்பு மும்பை இல்லத்திற்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாய்
சிறிது நேரம் குலவிய நல நேரங்கள் எண்ணக் குதிரைகளில் ஓடுகிறது.

கவிஞர் கண்ணதாசன் " பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை" என்ற பாடல்
வரிகள் மற்றும் அதே பாடலில் "நமக்காக நம் கையால் செய்வது நன்று " என்ற வரிகளும் நினைவில் வருகிறது.

ஆறுதல் சொல்ல தட்டச்சின் பொத்தான்களை தட்ட மனம் ஒவ்வவில்லை. யாருக்கு உண்மையாய் ஆறுதல் சொல்ல இயலும். எதிர்பார்த்த நிகழ்வு எனில் மனம் ஒப்புக்கொள்ளும். உலகாளும் இறைவனிடம் உருகி வேண்ட முடியும்.
உரிமையாய் கோபம் கொள்ள முடியுமா. சம்பிரதாயத்திற்காக துக்கம் கேட்க பவானி  அக்காவிடம் பேச எப்படியோ இருக்கிறது..
நல்லதை நினைத்து நல்லதே நடக்க எந்நாளும்  சிந்திப்பவர்க்கு நன்மையை அதிகஅளவில் அளித்திடு இறைவா. இது தான் உன் மேல் உலகு வைக்கும் நம்பிக்கை மிகுந்திட நல் மந்திரம். ஏற்பதும்  ஏற்காததும் உன் இச்சை.

Thursday 8 November 2012

தீபாவளி வாழ்த்துக்கள்


 விளக்கொளி விழா வாழ்த்துக்கள் 
 வாழ்வில் வளம் பல வகையாய் வந்திட
வினைகள் வறுமை விரைவில் விலகிட
விளக்கொளி திருநாள் தன்னில் மூலம் தன்னை 
முதல்வனுக்கு உரைத்த முருகன் தாள் 
பணிந்து வாழ்த் துதும் யாமே.   

அன்புடன்

வெற்றி இளவல் (ஜெயக்குமார்)
காலைகதிரோள் (உஷா )
அறிவுடையோன்  (விவேக்)
பணிவுடையோன்   (விநீத் )  

Thursday 16 August 2012

தந்தை வழிப் பாட்டி-நினைவலைகள்

இந்த பதிப்பு எந்தன் தந்தை வழிப் பாட்டி பற்றிய நினைவலைகள்.
நார் மடிப் புடவையை வழித்த தலையின் மேல் மூடிய வண்ணம் அணிந்து பள்ளிஅக்ராஹாரத்து பாட்டனாரின் வீட்டில் தனி அரசு நடத்தி வந்த நாட்கள். பாட்டனாரின் மறைவுக்கு பின்னர் நல நிலயில் இருக்கும் நான்கு மகன்களிடமும் அன்பும் பாசமும் கொண்ட ஒரே மகளிடமும் நிலையாய் இல்லாமால் பள்ளிஅக்ராஹாரத்து வீட்டில் மிகுதியான காலத்தை கழித்து அறுவடை முடிந்த பின் உள்ள சில வாரங்கள் எங்கள் எல்லோர் வீடுகளுக்கும் வந்து செல்வார்கள். அந்த வருகையின் எதிர்பார்ப்புகள் .. ஆம் புதிய நெல் அறுத்த பச்சை அரிசி , நல்ல பயறு இவை  சிறிய  சாக்கு பைகளில்.... எங்கள் வீட்டில் இறங்கிய உடன் பலா பலகையை எடுத்து பய்ரினை உருட்டி கற்கள் நீக்குவார். அதன் பின்னர் எந்திரத்தை நன்கு ஆய்வு செய்து சரியான படி இருந்தால் பயரினை  அரைத்து பொடி செய்வார்கள். ஒரு புறம் அன்னையாரின் அனுபவத்தில் சேமித்த வீட்டு  வெண்ணை உருக்கப்பட்டு புதிய நெய்யாய் மணக்கும். பாட்டியின் வரவிற்கென்றே காத்திருக்கும் மண்டை வெல்லம்...
நன்கு பொடி செய்த பயத்த மாவுடன், மணக்கும் நெய்யும் இனிய வெல்லமும் இணைந்து  வரும் கலவையை இளம் சூட்டில் சீராக உருண்டை செய்து முதலில்
உம்மாச்சிக்குஅர்ப்பணம் செய்தபின்
குட்டியாய் இருக்கும் எனக்கு முன்னுரிமை- தின்னத் தருவதில்.

காலங்கள் எதுவாக இருக்கட்டும்.. காலை நான்கு மணிக்கு நிச்சயம் விடியல். நல்ல filter காபி ... சூரியன் உதிக்கும் முன்பே குளித்து உயரத்தில் கம்பு கொடியில் உலரும் நார் மடி
புடவை உடுத்தி நெற்றியில் திருநீறணிந்து கழுத்தில் அணிந்த ஸ்படிக மாலையை கையில் எடுத்து இறைவனை நினைத்து ஒரு மணி ஜெபம்.. "மடி மாறாத என் வழி தனி வழி" என்று அந்த நாட்களிலேயே தனி பாட்டை வகுத்து ஆனால் இளைய தலைமுறையின் உணருவகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்தவர். எல்லா பிராமணர் குடும்பங்களில் மணமான பெண்கள் 9 கஜம் புடவை உடுப்பது என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட மரபு . எங்கள் அன்னையாரின் வேண்டுதலுக்கு செவி மடுத்து முக்கிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் எளிதாய் உடுத்தும்
6 கஜம் உடுத்திட இணக்கம் தெரிவித்தது.. இது எனக்கு செவி வழி வந்த செய்தி.

அவர்களின் வாழ்க்கையின் தாக்கம் மிக அதிக அளவில் எங்கள் அன்னையிடம் இக்காலத்தில் காண முடிகிறது. அகவை எண்பதுக்கும் மேல் ஆகியும் தன மக்களுடன் வாழாமல் தன தினப்படி வேலைகளை தானே திறம்பட செய்து- யாக்கை இயன்றாலும் இயலா விட்டாலும்.....   அனைவரின் நலனில் அக்கறை கொண்டு வாழும் உயிர்.
 
  

Wednesday 9 May 2012

பூணல் வாழ்த்து மடல்

பூணல் வாழ்த்து மடல் 

தன் ஒளி தண்ணொளி தருமிகு கோள்கள் தன்னுள் அடக்கிய
தரத்திற் தங்கமிநை  மாப்பிள்ளை "ரவிச்சந்திரன்"   

புதுக்கோட்டை பீடமம்ர் புவியாளும் அன்னை பெயர் பெற்ற 
பெட்டகமே சொத்தே சோதரி "சத்யா"

இல்லறத்தின் இனிய பயன் இளவல் - போதி மரத்தடி 
ஞானம் பெற்ற புத்தன பெயரோன் "சித்தார்த்"

முப்புரி நூலணி விழாவில் மாமன் மூவர் 
முப்புரம் எரித்த முக்கனோர்க்கே "மூலம்" 
முதலில் உரைத்த எம் குலக் கடவுள்
 அழகன் முருகன் அருளால் "அறவோன் அந்தணன் "
 ஆகு என வாழ்துதும் 
 வாழிய வளமுடன் வாழிய உயர்வுடன் 

Thursday 12 April 2012

நந்தினி வருட வாழ்த்துக்கள்


மேதினியில் மேன்மை மிக்க நலன்கள்
மலர்ந்திடவே மூலம்  தன்னை
முதல்வனுக்கு உரைத்த
முருகக் கடவுள் அருளை இறைஞ்சி
நந்தினி ஆண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன் வெற்றி இளவல் (ஜெயக்குமார்)