பூணல் வாழ்த்து மடல்
தன் ஒளி தண்ணொளி தருமிகு கோள்கள் தன்னுள் அடக்கிய
தரத்திற் தங்கமிநை மாப்பிள்ளை "ரவிச்சந்திரன்"
புதுக்கோட்டை பீடமம்ர் புவியாளும் அன்னை பெயர் பெற்ற
பெட்டகமே சொத்தே சோதரி "சத்யா"
இல்லறத்தின் இனிய பயன் இளவல் - போதி மரத்தடி
ஞானம் பெற்ற புத்தன பெயரோன் "சித்தார்த்"
முப்புரி நூலணி விழாவில் மாமன் மூவர்
முப்புரம் எரித்த முக்கனோர்க்கே "மூலம்"
முதலில் உரைத்த எம் குலக் கடவுள்
அழகன் முருகன் அருளால் "அறவோன் அந்தணன் "
ஆகு என வாழ்துதும்
வாழிய வளமுடன் வாழிய உயர்வுடன்
No comments:
Post a Comment