Friday 30 November 2012

அப்புட்டுவின் அகால மரணம்

நேற்று மாலை இல்லம் சென்று அடைந்த பின்னர் அறிந்த அதிர்ச்சி செய்தி
நாற்பதின் அருகில் இருந்த அப்புட்டுவின் அகால மறைவு. ஒரு புறம் பெற்ற அன்னை தந்தை மறுபுறம் மனைவி . இரு இளம் பெண் குழந்தைகள் . இவர்களின் எண்ணங்களை, கனவுகளை ஏக்கங்களாய் மாற்றி எழுதி இறந்து விட்டார்.
வெகு பல ஆண்டுகட்கு முன்பு மும்பை இல்லத்திற்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாய்
சிறிது நேரம் குலவிய நல நேரங்கள் எண்ணக் குதிரைகளில் ஓடுகிறது.

கவிஞர் கண்ணதாசன் " பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை" என்ற பாடல்
வரிகள் மற்றும் அதே பாடலில் "நமக்காக நம் கையால் செய்வது நன்று " என்ற வரிகளும் நினைவில் வருகிறது.

ஆறுதல் சொல்ல தட்டச்சின் பொத்தான்களை தட்ட மனம் ஒவ்வவில்லை. யாருக்கு உண்மையாய் ஆறுதல் சொல்ல இயலும். எதிர்பார்த்த நிகழ்வு எனில் மனம் ஒப்புக்கொள்ளும். உலகாளும் இறைவனிடம் உருகி வேண்ட முடியும்.
உரிமையாய் கோபம் கொள்ள முடியுமா. சம்பிரதாயத்திற்காக துக்கம் கேட்க பவானி  அக்காவிடம் பேச எப்படியோ இருக்கிறது..
நல்லதை நினைத்து நல்லதே நடக்க எந்நாளும்  சிந்திப்பவர்க்கு நன்மையை அதிகஅளவில் அளித்திடு இறைவா. இது தான் உன் மேல் உலகு வைக்கும் நம்பிக்கை மிகுந்திட நல் மந்திரம். ஏற்பதும்  ஏற்காததும் உன் இச்சை.

No comments:

Post a Comment