Sunday, 26 February 2012

கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள் : குடும்பத்தில் உட்ட்றார் உறவினர்களின் இறைவனடி சேர்ந்த தொடர் நிகழ்வுகள். முதிர்ந்த
பழுத்த இலையை ஒத்த மாமாவின் (இளைய) மறைவு. பின்னர் எதிர்பாராத விதமான இரண்டு மறைவுகள். பேபி மாமா மகன் கண்ணனின் குளியல் அறையில் விழுந்து தலை  காயத்தால் இறந்த செய்தி. சென்ற வார இறுதியில் கல்யாணி அக்காவின் அகால மரணம்.
இதகிடையில் உஷாவின் வீட்டில் முதிர்ந்த தொன்நூர்டு எட்டு வயது இந்திரா அம்மையின் ஈயற்கை எயய்தல்.

அனைவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். இறைவனின் முடிவுகளுக்கு ஞாயம் தேட நம்மால் இயலவே இயலாதா?  வாழ்வின் முழு நிலையை அனுபவித்த மனிதர்கள் பலர் பெயருக்கு உயிரை உடலில் வைத்து கொண்டு நடைப்பிணமாய் காலத்தை கடத்திகொண்டிருகின்றனர். அவர்களை மரணம் தழுவாததன் காரணம் கணிக்க இயலவில்லை..

 

Sunday, 5 February 2012

எல்லை தெய்வங்களின் திருவிழாக்கள்: 
தென்னூர் ஆட்டு மந்தை ஆண்டின் வசந்த காலம் முடிந்து ஏலம் வெய்யில் ஏறும் கோடை காலம்.. ஆண்டு முழுவதும் அசமஞ்சமாய் தூங்கி வழியும் மந்தை மெருகு  ஏறும் நேரம்.
எங்கள் வீட்டின் பின்புறம் செழித்து வளரும் வயல் காடிர்கிடையில் சல சல என்று ஓடும் ஆற்றின் கரையில்  .... ஸ்மசான பூமிக்கு மிக அருகில் (இந்த நினைவுகள் சுமார் நாற்பத்து ஐய்ந்டு ஆண்டுகட்கு முந்தையது) கோபுரமற்று திறந்த வெளியில் அமைந்த உக்கிர காளி அம்மன் கோயில். 

அங்கிருந்து தென்னூர் மந்தைக்கு அம்மனை மூன்று நாள் திருவிழாவிற்கு அழைத்து வருவார்கள். அது இரவு பத்து மணிக்கு பின்னர் நிகழும். இந்த "காளி வட்டம்" விழாவின் தனி சிறப்பு..  சிலம்பம் பொய்கால் குதிரை கரக ஆட்டம்  ஆகிய நாட்டுப்புற கலைகள் வெளிப்பாடு.. பனை ஓலைக்கு சமமான பொருளால் செய்யப்பட்ட அம்மன் உருவம்.. புலி வேஷம் கட்டி கூரான ஆயுதம்  கொண்டு தர்காப்ப்பு. அதை விட வேடிக்கை புலி வாலை படித்து உறும வெய்து பார்ப்பது.

இறங்கிய மறு நாள் ஆடு பலி.. இது என்னால் ஆண்டு முதல் இன்று வரை ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று..  எந்த தெய்வமும் சிருஷ்டியை காத்து உய்விக்க தோண்டிர்யா ஒன்று என்றால் அது மிகையன்று.
நம் மனித குளம் வாழ வேண்டி ஒன்றும் செய்ய இயலாத உயிர்களை பலி கொடுப்பது என்ன ஞாயம்.

"குட்டி குடிக்கும்" அந்த நாளில் தான் மக்கள் கூடம் நிறைந்து இருக்கும். இந்த திருவிழாவின் ஒரு நல்ல பாடம்.பிற மதங்களின் உணருவகளை மதித்து  நடப்பது. மந்தையின் எதிரில் அமைத்த மசூதி வழி செல்கையில் "தாரை தப்பட்டை வாசிப்பதை நிறுத்தி அந்த இடத்தை கடந்த பின் தொடரும் பழக்கம். விழாவில் எல்லோருடன் ஒன்றாய் கலந்துகொள்ளும் முகமதிய சகோதரர்கள்..

இருபத்து இயந்து ஆண்டுகள் பின் ஒரு முறை காளி கோயில் வழி சென்றால்.. நிறைய உரு மாற்றங்கள்... நம் முன்னேற்றத்தின் பிரதிபலிப்புகள்.


         
  
 ..